ராகுல்காந்தி விவகாரத்தில் வெளிநாடுகளின் ஆதரவு தேவையில்லை -கபில் சிபல்

0 1970

ராகுல் காந்தி விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீட்டை தாங்கள் விரும்பவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை பெற்று, ராகுல் எம்.பி. பதவியை இழந்திருக்கும் சூழலில், அதுகுறித்து தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக ஜெர்மன் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் நன்றி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ராகுல் விவகாரத்தில் நீதியை நோக்கி நடைபோட வெளிநாடுகளின் ஊன்றுகோல் தங்களுக்குத் தேவையில்லை என்றும் இது எங்கள் சண்டை, நாங்கள் ஒற்றுமையாக இருந்து போராடுகிறோம் என்றும் கபில் சிபல் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments