3 மகன்களை பள்ளிக்கு அனுப்பாமல் 4 ஆண்டுகளாக வீட்டில் பூட்டி வைத்திருந்த தாய்

0 40472

குமரி அருகே, ஆசிரியர்கள் அடித்து துன்புறுத்தியதாக கூறி மகன்களை பள்ளிக்கு அனுப்பாமல் 4 ஆண்டுகளாக தாய், வீட்டிலேயே பூட்டி வைத்திருந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இரணியலைச் சேர்ந்த முருகன் - பிரேமா தம்பதிக்கு 3 மகன்கள் உள்ள நிலையில், முருகன் கேரளாவில் பணிபுரிந்து வருகிறார். பிரேமா தனது மகன்களை 4 ஆண்டுகளாக வீட்டிற்குள் பூட்டி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் படி, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் போலீசாருடன் அவரது வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது, 4 ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கு சீருடை அணியாமல் சென்ற மகன்களை ஆசிரியர்கள் அடித்து துன்புறுத்தியதாகவும், அதனால் மகன்களை ஏதாவது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் பள்ளிக்கு அனுப்பவில்லை என்று கூறிய பிரேமா, அதிகாரிகளை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments