பாலாடைக் கட்டி தயாரிப்பில் ஈடுபட்ட பிரிட்டன் மன்னர் சார்லஸ்
அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரிட்டன் மன்னர் சார்லஸ் அங்கு உள்ள சுற்று கிராமமான ப்ரோடோவினுக்கு சென்று அங்கு பாலாடை கட்டி தயாரிப்புகளை பார்வையிட்டார்.
பெர்லினில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுசூழல் கிராமத்துக்கு சென்ற சார்லஸ் உடன் ஜெர்மன் அதிபர் பிராங்கு வால்டர் மற்றும் பிராண்டன்பர்க் பிரதமர் டீட்மர் ஆகியோர் சென்றிருந்தனர். அங்கு திரண்டு இருந்த மக்களுக்கு சார்லஸ் வாழ்த்து தெரிவித்தார்.
சுற்று சூழல் கிராமத்தில் பாலாடை கட்டிகளை தயாரிப்பை பார்வையிட்ட மன்னர் சார்லஸ் ,அதன் தயாரிப்பிலும் ஈடுபட்டார் பின்னர் அங்கு கிரீடத்தின் வடிவத்தில் ஒரு கேக்கை வெட்டி அவர் அனைவருக்கும் வழங்கினார்.
Comments