காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் தாய்லாந்து சுற்றுலா எதிர்காலம்
தாய்லாந்து நாட்டில் சுற்றுலா துறையின் எதிர்காலம் காற்று மாசுபாட்டால் இருளில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அந்நாட்டில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு சுகாதார சேவைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. கடந்த வாரத்தில் மட்டும் காற்று மாசுபாட்டால் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக தலைநகர் பாங்காங்கில் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருந்து பணிகளை கவனிக்குமாறு தாய்லாந்து அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளின் ஜன்னல்களை முழுமையாக அடைத்து வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Comments