சத்யா ஸ்டுடியோ நிர்வாகத்திடம் இருந்து அரசு நிலத்துக்கான குத்தகை பாக்கி ரூ.31 கோடியை செலுத்த உத்தரவு..!
சென்னை சத்யா ஸ்டுடியோ நிர்வாகத்திடம் இருந்து அரசு நிலத்துக்கான குத்தகை பாக்கி 31 கோடி ரூபாயை வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடையாறிலுள்ள சத்யா ஸ்டுடியோ நிறுவனத்துக்கு கடந்த 1968ஆம் ஆண்டு 93 ஆயிரத்து 540 சதுர அடி அரசு நிலம் குத்தகையாகக் கொடுக்கப்பட்டது.
1998ல் அந்த குத்தகை காலம் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், 2004ஆம் ஆண்டு வரை குத்தகை நிலுவையான 31 கோடியே 9 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயை சத்யா ஸ்டுடியோ நிர்வாகம் செலுத்தவில்லை.
இதனால் அந்த நிலம் 2008ல் திருப்பி எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனை எதிர்த்து சத்யா ஸ்டுடியோ நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு காரணமாக ஸ்டுடியோ அமைந்துள்ள பகுதிக்கு அருகே இணைப்புச் சாலை அமைக்கும் திட்டமும் தடைபட்டது.
இந்த நிலையில், 3 மாதங்களில் வாடகை பாக்கிய வசூலிக்கவும் அரசு நிலத்துக்கு வேலி அமைத்து பாதுகாக்கவும் உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், இணைப்புச் சாலை அமைக்கும் பணியை தொடரவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது
Comments