கடலுக்குள் டால்பின்களை துரத்திச் சென்று துன்புறுத்திய 33 நீச்சல் வீரர்கள் மீது வழக்குப்பதிவு..!
அமெரிக்காவின் ஹவாய் தீவில் கடலில் டால்பின்களை துரத்திச் சென்று துன்புறுத்தியதாக 33 நீச்சல் வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Honaunau பகுதியில், நிலம் மற்றும் இயற்கை வளங்கள் துறையினர் டிரோன் மூலமாக கண்காணித்தபோது ஒரு குழுவினர் டால்பின்களை ஆக்ரோஷமாக பின் தொடர்ந்துச் சென்று துன்புறுத்தியது தெரிய வந்தது.
கரையில் இருந்து இரண்டு கடல் மைல்களுக்குள் டால்பினை 45 மீட்டர் தூரத்திற்குள் பின்தொடர்வது தடை செய்யப்பட்டுள்ளதால் 33 பேருக்கும் கடல் பாலூட்டி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 20 ஆயிரம் டாலர் அபராதம் அல்லது ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
Comments