மக்கள் செல்போனில் அதிக நேரம் செலவிடுவதாக உலகின் முதல் செல்போனை கண்டுபிடித்த மார்டின் கூப்பர் வேதனை..
சாலையை கடக்கும்போது கூட செல்போன் திரையிலிருந்து கண்களை எடுக்காமல் மக்கள் செல்வதை பார்க்கும்போது, தனக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக, செல்போனை கண்டுபிடித்தவரான மார்டின் கூப்பர் தெரிவித்துள்ளார்.
1973ஆம் ஆண்டு, மோட்டரோலா நிறுவனத்தில் பணியாற்றியபோது, உலகின் முதல் செல்போனை மார்டின் கூப்பர் வடிவமைத்தார்.
தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டபோது மக்கள் அதிக நேரம் அதில் மூழ்கி கிடந்ததை நினைவுகூர்ந்த மார்டின் கூப்பர், அடுத்த தலைமுறையினர் செல்போன்களை பயனுள்ள வகையில் பயன்படுத்த கற்றுகொள்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
Comments