எங்களுக்கும் கார் கொடுங்க என கோரஸாக கேட்ட எம்.எல்.ஏக்கள்.. அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த பதிலால் சிரிப்பலை

0 3106
சட்டப்பேரவையில் தாங்கள் பயணிக்க கார் வேண்டும் எனக் கேட்ட எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கிய பதிலால் சிரிப்பலை எழுந்தது.

சட்டப்பேரவையில் தாங்கள் பயணிக்க கார் வேண்டும் எனக் கேட்ட எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கிய பதிலால் சிரிப்பலை எழுந்தது.

மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின் பதிலுரை வழங்கிக் கொண்டிருந்த அமைச்சர் ஐ.பெரியசாமி, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் தங்களது பணிகள் நிமித்தம் பயணிக்க கார்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதகாக் கூறினார்.

அப்போது அவையிலிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கும் கார் வழங்க வேண்டும் என கோரசாக கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஐ பெரியசாமி, மனது கடலை போல விரிந்திருக்கிறது என்றும் ஆனால் நிதி ஆதாரம்தான் சுருங்கி இருக்கிறது என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments