வேலூர் கோட்டையில் பெண்களின் புர்காவை கழட்டச்சொல்லி மிரட்டல்..! வீடியோ வெளியிட்ட 7 பேர் கைது

0 4054
வேலூர் கோட்டையில் தங்கள் ஆண்நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த புர்கா அணிந்த பெண்களிடம் அந்த உடையை அகற்றக்கூறி வம்பு செய்த வழக்கில் 7 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வேலூர் கோட்டையில் தங்கள் ஆண் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த புர்கா அணிந்த பெண்களிடம் அந்த உடையை அகற்றக்கூறி வம்பு செய்த வழக்கில் 7 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வேலூர் கோட்டைக்கு தங்களது ஆண் நண்பர்களுடன் வந்திருந்த இளம் பெண்களிடம் அவர்கள் அணிந்திருந்த புர்காவை அகற்றுமாறு சிலர் சட்ட விரோதமாக மிரட்டி அவர்களை வீடியோ பதிவு செய்தனர்.

தாங்கள் ஏன் புர்காவை அகற்ற வேண்டும் என்று ஒரு பெண் உருது மொழியில் பேச , வீடியோ எடுத்த நபரும் உருது மொழியில் பேசி மிரட்டினார் அந்தப்பெண் அவர்களிடம் இருந்து தப்பிச்செல்லும் நிலை ஏற்பட்டது.

மற்றொரு பெண்ணிடம் புர்காவை கழட்டச்சொன்னபோது அவருடன் வந்திருந்த இளைஞர் தெரிந்தவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். செல்போனை எடுத்து பேசக்கூடாது என்று மிரட்டியதோடு ஜமாத்துக்கு வாருங்கள் நிக்கா செய்து வைக்கிறோம் என்று கட்டாயப்படுத்தினர்.

தொடர்ந்து புர்கா அணிந்த பெண்களாக பார்த்து வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீடியோவை பதிவு செய்து பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டார். கடந்த 22 ந்தேதி வேலூர் கோட்டையில் புர்கா அணிந்த பெண்களை குறிவைத்து அத்துமீறி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் என 7 பேரை வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

கைது செய்யப்பட்டவர்களின் முகத்தை பைகளால் மூடி அழைத்து வந்த போலீசார் கைது செய்யப்பட்டவர்களின் பெயர் விவரங்களை வெளியிடவில்லை. சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொது இடங்களில் யாராவது வந்து இது போன்று தனிமனித உரிமைகளை மீது பாதிக்கும் வகையில் வீடியோ எடுத்து மிரட்டினால் அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பாக இந்த வீடியோவை யாரும் பயன்படுத்தவோ , பரப்பவோ கூடாது மீறி பரபபுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

 

எதற்காக வீடியோ எடுத்தார்கள் என்ற கேள்விக்கு , புலன் விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணை முடிவில் தான் அதுபற்றி தெரியவரும் என்று சர்ச்சைக்குரிய அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டதுள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments