பாகிஸ்தானில் போலீஸ் வேன் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு.. 4 போலீசார் மரணம்

0 1926
பாகிஸ்தானில், போலீஸ் வேன் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீசார் 4 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில், போலீஸ் வேன் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீசார் 4 பேர் உயிரிழந்தனர்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், அதிகாலை வேளை காவல்நிலையம் திரும்பிக்கொண்டிருந்த போலீஸ் வேன் மீது, பயங்கரவாதிகள் அதிநவீன தானியங்கி துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் காவல்துறை டி.எஸ்.பி. உள்பட 4 போலீசார் உயிரிழந்தனர்.

போலீசார் பதிலுக்கு சுடத் தொடங்கியதும் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர். பாகிஸ்தானில் இயங்கிவரும் தெஹ்ரீக் இ தலிபான் என்ற பயங்கரவாத இயக்கம் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments