தயிர் பாக்கெட்டில் ஹிந்தி.. கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, வழிகாட்டுதல்களை திருத்தியது FSSAI..
தயிர் பாக்கெட்டில் தஹி என்ற ஹிந்தி வார்த்தையை அச்சிடும்படி வெளியிட்ட வழிகாட்டுதல்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அந்த வழிகாட்டுதல்களை மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு நிர்ணய அமைப்பு திருத்தியுள்ளது.
தயிர் பாக்கெட்டுகளில் தஹி என்று ஹிந்தி பெயரை பதிக்கும்படி, மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு நிர்ணய அமைப்பு அறிவுறுத்தியிருந்தது.
இதனை ஹிந்தி திணிக்கும் முயற்சி எனக்கூறி, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து 'Curd' என்ற வார்த்தையுடன் சேர்த்து பிராந்திய மொழி வார்த்தைகளான தயிர், பெருகு உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம் என வழிகாட்டுதலை மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு நிர்ணய அமைப்பு திருத்தியுள்ளது.
Comments