ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்..!
சென்னை ரோகிணி திரையரங்குக்கு படம் பார்க்கச்சென்ற நரிக்குறவர் இன மக்களை உள்ளே அனுமதிக்கவில்லை என சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கான காரணத்தை திரையரங்க நிர்வாகம் அறிக்கையாக வெள்யிட்டுள்ளது.
ரோகிணி திரையரங்கில் வெளியான பத்து தல படத்தைப் பார்க்க நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் டிக்கெட் வாங்கிச் சென்றுள்ளனர். திரையரங்க ஊழியர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஊழியர்கள் தங்களை வெளியே தள்ளிய நிலையில், சிசிடிவி கேமராவில் அதனைப் பார்த்துவிட்ட திரையரங்க மேலாளர் தங்களை உள்ளே செல்ல அனுமதிக்கச் சொன்னதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.
யு/ஏ சான்றிதழ் பெற்ற படம் என்ற நிலையில், 2 முதல் 10 வயதுடைய குழந்தைகளை அழைத்து வந்ததால் ஊழியர்கள் அனுமதி மறுத்தனர் என விளக்கம் கொடுத்துள்ள திரையரங்கு நிர்வாகம், அவர்கள் படம் பார்க்கும் வீடியோவை திரையரங்க நிர்வாகம் டுவிட்டரில் வெளியிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரித்து வரும் நிலையில், கலைகள் அனைவருக்கும் சொந்தமானது என்றும் முதலிலேயே அனுமதித்திருக்க வேண்டும் என்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Comments