உக்ரைன் போரை கண்டித்து ஓவியம் தீட்டிய ரஷ்ய சிறுமியின் தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை!
ரஷ்ய படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்ததை கண்டிக்கும் விதமாக, ஓவியம் தீட்டிய ரஷ்ய சிறுமியின் தந்தைக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் வசிக்கும் தாய், மகள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை வீசுவதுபோல் மாஷா என்ற 12 வயது சிறுமி, பள்ளியில் ஓவியம் தீட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவரது தந்தை மோஸ்காலியோவிடம் போலீசார் விசாரித்தபோது, அவரும் உக்ரைன் போரை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது தெரியவந்தது.
மோஸ்காலியோவை வீட்டிலேயே சிறை வைத்த போலீசார், மாஷாவை குழந்தைகளுக்கான காப்பகத்தில் சேர்த்தனர். மோஸ்காலியோவிற்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரவோடு இரவாக வீட்டு காவலிலிருந்து தப்பிச்சென்ற மோஸ்காலியோவை போலீசார் தேடிவருகின்றனர்.
Comments