தங்கக்கடத்தலில் ஈடுபட்ட வடசென்னையை சேர்ந்த குருவி ரசூலை கடத்தி சித்திரவதை... 4 பேர் கைது

0 14904

தங்கக்கடத்தலில் ஈடுபட்ட வடசென்னையை சேர்ந்த குருவி ஒருவரை கடத்தி சித்திரவதை செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைதுசெய்தனர்.

வடசென்னையை சேர்ந்த ரசூல் என்பவர் கடந்த மாதம் 26-ம் தேதி 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை திருச்சியில் இருந்து காரில் கடத்தி வந்தார். மதுராந்தகம் அருகே வந்தபோது மற்றொரு காரில் வந்த கும்பல் ரசூலின் காரில் மோதிவிட்டு அவரிடம் இருந்த தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் குருவி ரசூலுக்கு வேலை கொடுத்த தங்க கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், ரசூல் தங்களை ஏமாற்றிவிட்டு நாடகமாடுவதாக நினைத்து அவரை மகாபலிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கடத்திச்சென்று சித்திரவதை செய்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ரசூலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து ரசூலின் மனைவி காவல் ஆணையரிடம் புகார் அளித்த நிலையில், ரசூலை சித்திரவதை செய்த அப்துல் சலாம், அப்துல் வதுர், அப்துல் ரகுமான் மற்றும் அப்துல் குத்தூஸ் ஆகிய 4 பேரையும் வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments