போபால்-டெல்லி இடையே புதிய வந்தே பாரத் ரயிலை ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
போபால்-டெல்லி இடையே புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி ஏப்ரல் ஒன்றாம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
மத்தியப் பிரதேசத்துக்கு வருகை தரும் மோடி இங்குள்ள ராணிகமலாப்பட்டி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைக்கிறார்.
சுமார் 708 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரயில் 8 மணிநேரத்திற்குள் சென்றடையும். கமாண்டர்கள் மாநாட்டிலும் பங்கேற்க உள்ள பிரதமர், முப்படைத் தளபதிகளுடன் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.
Comments