தலைமறைவாக உள்ள காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங் சரண் அடைகிறாரா? வீடியோ வெளியிட்டு போலீஸ் காவலில் இல்லை என மறுப்பு!
![](https://d3dqrx874ys9wo.cloudfront.net/uploads/web/images/750x430/1680139191199933.jpg)
தலைமறைவாக உள்ள காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் பொற்கோவில் அருகே சரண் அடைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் வீடியோ பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், தாம் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான வதந்திகளை மறுத்துள்ளார்.
தமக்கு ஆதரவு அளித்ததற்காக பல அப்பாவிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Comments