ராகுல் காந்தி பதவி பறிப்புக்கு எதிராக மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்!

0 2071

எம்.பி பதவி பறிக்கப்படக் காராணமாக இருந்த 2 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பிரதமர் மோடி பற்றிய அவதூறு பேச்சுக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் கடந்த 23-ந்தேதி 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.

அதைத் தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு  மனுவை கட்சியின் மூத்த சட்ட ஆலோசகர்கள் தயார் செய்துள்ளனர். இந்த மனு சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments