உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை 24 மணி நேரத்தில் நிறுத்த முடியும் - டொனால்ட் டிரம்ப்!
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை 24 மணி நேரத்தில் தம்மால் நிறுத்த முடியும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டு வரும் திட்டம் தம்மிடம் இருப்பதாகவும் அதனை பகிரங்கப்படுத்தினால், பின்னர் தம்மால் செயல்படுத்த முடியாமல் போகும் என கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு வரை போர் நீடிக்கும் பட்சத்தில், தேர்தலில் அதிபராக தம்மைத் தேர்வு செய்தால், 24 மணிநேரத்திற்குள் போரை முடிவுக்கக் கொண்டு வருவது தமக்கு மிக இலகுவான காரியம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
Comments