அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!
அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள மொஜாவே பாலைவனப் பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ரயில் பாதையான கெல்சோ டிப்போவுக்கு அருகில் இரும்பு தாதுகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
தெற்கு நோக்கிச் சென்ற ரயிலின் இரண்டு என்ஜின்கள் மற்றும் 55 பெட்டிகள் தடம் புரண்டு ஒன்றின் மீது ஒன்று விழுந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. விபத்தில் உயிரிழப்புகள் இல்லையெனவும், தண்டவாளம் உடனடியாக சீரமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து துவங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments