''ஜெர்மனி வழங்கிய லெப்பர்ட் வகை டேங்குகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்..'' - உக்ரைன்..!
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் வழங்கிய டேங்குகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.
லெப்பர்ட் 2 வகையைச் சேர்ந்த 18 டேங்குகள் வழங்குவதாக ஜெர்மனி உறுதி அளித்திருந்த நிலையில் அதன் ஒரு பகுதி திங்கள் கிழமை பிற்பகுதியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜெர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.
இந்தவகை டேங்குகளால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இங்கிலாந்தின் சேலஞ்சர் டாங்கிகள் உக்ரைனை அடைந்துள்ளன. இதேபோல் அமெரிக்கா எம்1ஏ2 ஆப்ராம்ஸ் டாங்கிகளையும், ஸ்வீடன் 10 டேங்குகளையும் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.
Comments