சென்னையில் ரூ. 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்துச்சென்ற வழக்கில் முதலீடு செய்த நபர்கள் நகைகளை பறித்து சென்றது அம்பலம்!

0 2865

சென்னையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகையை பறித்து சென்ற வழக்கில் நகைக் கடையில் முதலீடு செய்த நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நொளம்பூரில் உள்ள ஏ.ஆர்.டி நகைக் கடையில் பணிபுரியும் ஆசிக் மற்றும் அந்தோணி ஆகியோரிடம் இருந்த 3 கிலோ தங்க நகைகளை சில நாட்கள் முன்பு மர்ம கும்பல் ஒன்று பறித்துச் சென்றுள்ளது.

இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இந்த நகைக்கடையில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் வாரம் 3 ஆயிரம் ரூபாய் வீதம் மாதத்துக்கு 12 ஆயிரம் ரூபாய் வட்டியாக தருவதாக கூறியதாகவும் கடந்த ஒரு வார காலமாக பணத்தை முறையாக முதலீட்டாளர்களுக்கு வழங்காமல் இருந்ததும் தெரிய வந்தது.

அங்கு முதலீடு செய்த நபர் மூலமாக 30க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளதும், ஒரு வாரம் கடந்தும் முதலீட்டுக்கான வட்டி எதுவும் கொடுக்காததால் அந்த நபர் நகைகளை கொண்டு சென்றதும் போலீசாருக்கு தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments