ஆப்கான் அகதிகளை வீடுகளுக்கு மாற்ற இங்கிலாந்து அரசு புதிய சலுகை..!
இங்கிலாந்தில் உள்ள ஹோட்டல்களில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள் அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் கீழ் வீடற்றவர்களாக மாறக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டில் தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து காபூலில் இருந்து தப்பி ஓடிய சுமார் 9,000 ஆப்கானிஸ்தான் அகதிகள் முதல் சலுகையை ஏற்றுக் கொண்டால் கடந்த 18 மாதங்களாக தற்காலிக ஹோட்டல் தங்குமிடங்களிலிருந்து வெளியேற்றி நிரந்தர வீடுகளுக்கு மாற்றப் போவதாக அறிவித்தது.
ஹோட்டல்களில் இருப்பவர்கள் குடியேற ஏப்ரல் மாதம் கடிதங்களைப் பெறத் தொடங்குவார்கள் என்றும் இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
முதல் சலுகையை ஏற்காதவர்களுக்கு இரண்டாவது மாற்று வழங்கப்படாது என்பதால் பல ஆயிரம் அகதிகள் தங்கள் குழந்தைகளுடன், வீடற்றவர்களாக மாறக்கூடும் என்ற நிலை உருவாகியுள்ளது.
Comments