கிழக்கு ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீ
ஸ்பெயின் நாட்டின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.
காஸ்டெல்லோன் பிராந்தியத்தில் பற்றிய காட்டுத் தீ வலென்சியா மற்றும் அரகோன் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் பரவியது.
இந்நிலையில் காட்டுத் தீ காரணமாக அப்பகுதியில் வசித்து வந்த சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிலையில் காஸ்டெல்லோன் பகுதிக்குச் சென்ற ஸ்பெயின் பிரதமர் வறண்ட வானிலை காரணமாக காட்டுத் தீ பற்றி எரிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Comments