பெரம்பூரில் அதிமுக பகுதிச் செயலாளர் அரிவாளால் வெட்டி படுகொலை

0 2523

சென்னை பெரம்பூரில் அதிமுக நிர்வாகியை வெட்டி படுகொலை செய்த வழக்கில் சிறுவன் உள்பட 5பேர் போலீசில் சரண் அடைந்தனர்.

பெரம்பூரைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் அதிமுகவின் பெரம்பூர் பகுதி தெற்கு செயலாளராக இருந்து வந்தார். நேற்றிரவு கக்கன்ஜி காலனி முத்து மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அலுவலகத்தை மூடி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அங்கு வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் இளங்கோவனை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது.

  இதில் தலை மற்றும் முகத்தில் வெட்டுக் காயம் அடைந்த இளங்கோவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தகவலறிந்தும் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சிறுவன் உள்பட 5பேர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களிடம் இருந்து பட்டாக்கத்திகள், ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments