வடகொரியாவில் 653 துப்பாக்கி குண்டுகள் மாயம்.. நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வீடு வீடாக சென்று சோதனை!
வடகொரியாவில் ராணுவம் திரும்பப் பெறும்போது 653 தோட்டாக்கள் காணாமல் போனதைத் தொடர்ந்து ஒரு நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் எல்லையில் அமைந்துள்ள நகரைச் சுற்றி உள்ள பகுதியில் இருந்து, கொரிய மக்கள் ராணுவத்தின் 7-வது படையினர் பின்வாங்கிக் கொண்டிருந்தபோது, கடந்த 7ஆம் தேதி துப்பாக்கி வெடிமருந்துகள் காணாமல் போனது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆரம்பத்தில் புகார் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் 653 தோட்டாக்களை கண்டுபிடிக்க நகரம் முழுவதும் அதிபர் கிம் ஜாங் உன் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள் ளார்.சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த நகரில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Comments