ஜி20 நாடுகளின் உள்கட்டமைப்பு பணிகள் உச்சி மாநாடு இன்று தொடக்கம்.!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஜி 20 நாடுகளின் உள்கட்டமைப்பு பணிக்குழுக் கூட்டம் இன்று தொடங்குகிறது.
இந்த இரண்டுநாள் மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். வெளிநாட்டு பிரதிநிதிகளுக்குத் தேவையான போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றுக்காக 157 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநாட்டின் போது வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு மாநிலம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய முழுமையான தகவல்கள் வழங்கப்படும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, மாநாட்டையொட்டி விசாகப்பட்டினம் நகரமே வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
Comments