இயக்குனர் பாலாவின் "வணங்கான்" படப்பிடிப்பில் தாக்கப்பட்ட துணை நடிகை.. சம்பள பாக்கியை பெற்றுத்தர கோரி புகார்

0 5847

இயக்குனர் பாலாவின் "வணங்கான்" படப்பிடிப்பில் தாக்கப்பட்ட துணை நடிகை லிண்டா, தன்னை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தன்னுடன் வந்த துணை நடிகைகளுக்கான சம்பள பாக்கியை பெற்றுத்தரக்கோரியும், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

நடிகர் அருண் விஜய் நடிப்பில், பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்திற்காக, ஜிதின் ஜிஜோ என்பவர், கேரளாவில் இருந்து லிண்டா உட்பட 9 துணை நடிகைகளை வரவழைத்து நடிக்க வைத்துள்ளார்.

9 நடிகைகளுக்கு 3 நாட்கள் சம்பளமாக 22,600 ரூபாய் பேசப்பட்ட நிலையில், அதைக் கேட்க போன லிண்டாவை ஜிதின் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் லிண்டா கன்னத்தில் காயமடைந்தார். இது தொடர்பாக கன்னியாகுமரி காவல்நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், லிண்டா எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments