சேலம் ஆத்தூர் அருகே சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து..!

0 2259

சேலம் ஆத்தூர் அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார், சாலையோர பெயர் பலகை மீது மோதி, தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அந்த கார், அம்மம்பாளையம் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, சாலையோர பெயர் பலகை மீது மோதிய கார், அருகே இருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் மோதி தலை குப்புற கவிழ்ந்தது.

விபத்தில், சாலையோரம் நின்றிருந்த தம்பதி படுகாயமடைந்தனர். காரில் இருந்த "ஏர் பேக்" விரிந்ததால் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.

இந்நிலையில், ஸ்டீரிங் திடீரென லாக் ஆனதால் கார் கட்டுப்பாடை இழந்ததாக ஓட்டுநர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments