ரஷ்யாவின் தாக்குதலை விமர்சிக்கும் வகையில் ஓவியம்.. தந்தையிடமிருந்து பிரித்து, வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட 13 வயது சிறுமி..!

0 1389
ரஷ்யாவின் தாக்குதலை விமர்சிக்கும் வகையில் ஓவியம்.. தந்தையிடமிருந்து பிரித்து, வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட 13 வயது சிறுமி..!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை விமர்சிக்கும் வகையில் ஓவியம் வரைந்ததற்காக ரஷ்யாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் அவரது தந்தையிடம் பிரிக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

போரில் ஏராளமான வீரர்களை இழந்து வரும் ரஷ்யா, புதியவர்களை ராணுவத்தில் சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அங்கு தேசப்பற்று தொடர்பான பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தாயை இழந்து தந்தையுடன் தனியே வசித்து வந்த மரியா மாஸ்கால்யோவா என்ற 13 வயது சிறுமி, பள்ளியில் ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார்.

அதில் உக்ரேனிய கொடியுடன் ஒரு பெண்ணும் குழந்தையும் நிற்பது போலவும் அவர்களை நோக்கி ரஷ்ய ஏவுகணை ஒன்று வருவது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. அதனைப் பார்த்த பள்ளி ஆசிரியை போலீசாருக்குத் தகவல் கொடுக்கவே, சிறுமி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments