விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரம் : அம்பை ஏ.எஸ்.பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

0 1927
விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரம் : அம்பை ஏ.எஸ்.பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக எழுந்த சர்ச்சையில் ஏ.எஸ்.பி பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்படும் நபர்களின் பற்களை பிடுங்குவது, கற்களை கடிக்கச் சொல்லி, தலையில் ஓங்கி அடிப்பது என அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. பாதிக்கப்பட்ட சிலர் வீடியோக்களையும் வெளியிட்டனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், பாதிக்கப்பட்ட 3 பேரையும் கிராம நிர்வாக அலுவலருடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, சார் ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், பல்வீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments