80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுதங்கள் ஏற்றுமதி - பாதுகாப்பு அமைச்சகம்

0 1529

இலங்கை,  மாலத்தீவு, மொரிசீயஸ், நேபாளம், எகிப்து, பூடான் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2018- 22 காலகட்டத்தில் உலக அளவில் மிகவும் அதிகமாக 11 சதவீதத்துக்கு ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்ததாக ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் இன்டர்நேசனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சக அறிக்கையில், 2015-16 நிதியாண்டில் 2 ஆயிரத்து 59 கோடி ரூபாய்க்கு இந்தியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், அதனுடன் ஒப்பிடுகையில் 7 மடங்கு அதிகமாக 2022-23ம் நிதியாண்டில் சாதனை அளவாக 13 ஆயிரத்து 399 கோடி ரூபாய்க்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments