டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு என்ற சர்ச்சை - அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் விளக்கம்
டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரே தேர்வு மையத்தில் பயின்ற 700 பேர் டிஎன்பிசி தேர்வில் வெற்றி பெற்றது குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.
அதற்கு விளக்கமளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 7000 அரசு பணிகளுக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள் என்றும் அதுவும் ஒரே நாளில் தேர்வு என்றால் பல்வேறு குளறுபடிகள் இருக்கத்தான் செய்யும் என்றார்.
எனவே இந்த முறை மாற, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தில் பல்வேறு மாற்றங்கள், கொண்டுவரப்பட உள்ளது என்றும் அவர் கூறினார்.
Comments