திருப்பத்தூர் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்த மாவட்ட ஆட்சியர்..!
திருப்பத்தூரில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்திற்கு தாமதமாக வந்த 10க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை வெளியே நிற்க வைத்துவிட்டு, கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நடத்தினார்.
மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இக்கூட்டத்துக்கு காலை 9 மணிக்குள் அனைத்து துறை அதிகாரிகளும் வர வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
அதனைப் பொருட்படுத்தாமல் சில அதிகாரிகள் தாமதமாக வந்தனர். இதையடுத்து உரிய நேரத்தில் வந்த அதிகாரிகளை மட்டுமே அனுமதித்து கூட்டத்தை ஆட்சியர் நடத்தினார்.
Comments