2 குறுகிய தூர பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்ததாக தென்கொரிய ராணுவம் தகவல்!
வடகொரியா இன்று 2 குறுகிய தூர பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை பரிசோதித்ததாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
தென்கொரிய கடற்படையுடன் இணைந்து அமெரிக்காவின் நிமிட்ஸ் விமானந் தாங்கி கப்பல் உள்ளிட்ட கப்பல்கள் இன்று கூட்டு பயிற்சி நடத்தவுள்ளன. இதையடுத்து பூசன் துறைமுகத்தில் நிமிட்ஸ் கப்பல் நாளை நிறுத்தப்படவுள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடக்கு ஹ்வாங்கே மாகாணத்தில் இருந்து வடகொரியா 2 ஏவுகணைகளை பரிசோதித்ததாகவும், அந்த ஏவுகணைகள் 370 கிலோ மீட்டர் தூரம் பறந்து, கடலில் விழுந்ததாகவும் தென்கொரிய ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
Comments