இளம் ரஷ்யர்களுக்கு போதுமான தேசபக்தி இல்லை... ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மகள் குற்றச்சாட்டு
இளம் ரஷ்யர்கள் போதுமான தேசபக்தியுடன் இல்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மகள் குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்யர்கள் அதிபருக்கு விசுவாசமாக இருக்கிறார்களா என்பதை அறிய விளாடிமிர் புடினின் மகள் கேடரினா டிகோனோவா (Katerina Tikhonova) 70 மில்லியன் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்துள்ளார்.
18 முதல் 35 வயதுடைய ரஷ்யர்களின் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்தததில் அவர்கள் தனது தந்தைக்கு விசுவாசமாக இல்லை என்பதை அறிந்துள்ளார்.
அக்ரோபாட்டிக் நடனக் கலைஞராக இருந்து பின்னர் மல்டி மில்லியனராக மாறிய கேடரினா டிகோனோவா மாஸ்கோவில் உள்ள இன்னோபிராக்டிகா இன்ஸ்டிடியூட் தலைவராக பொறுப்பு ஏற்றார். இந்த குழு ரஷ்யர்கள் புடினின் அரசை நேசிக்கவில்லை என்பதை கண்டறிந்துள்ளது.
Comments