கடும் விஷமுள்ள கண்ணாடி விரியனை பிளாஸ்டிக் டப்பாவில் பிடித்த நபர்.. பாம்பினை ஒப்படைக்க ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கினார்!
கரூரில் கடும் விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பைப் பிடித்த நபர் ஒருவர் அதனை யாரிடம் ஒப்படைப்பது எனத் தெரியாமல் அலைந்து திரிந்தார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் தனது வீட்டின் அருகே உலாவிக் கொண்டிருந்த கடும் விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பினை பிடித்து அதனை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைத்தார்.
பின்னர் அதனை வெங்க மேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கச் சென்றபோது காவலர்கள் வாங்க மறுத்ததால், கரூர் நகர காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கும் பாம்பினை வாங்க யாரும் முன்வராததால் கரூர் தீயணைப்புத்துறையினரிடம் வழங்க முயன்றார்.
அவர்களும் வாங்க மறுத்து வனப்பகுதியில் விடுவிக்க அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தான்தோன்றிமலை வனச்சரக அலுவலகம் சென்ற லோகநாதன், வனத்துறை வசம் பாம்பினை ஒப்படைத்தார்.
Comments