வீட்டில் ஸ்கேன் எந்திரம் மூலம் பாலின சோதனை நடத்த ரூ.26,400 வசூலித்த 3 பேர் கைது!

0 6307

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே வீட்டில் ஸ்கேன் எந்திரம் மூலம் பாலின சோதனை நடத்த தலா 26 ஆயிரத்து 400 ரூபாய் வசூலித்த 3 பேரை போலீசார் கைது செயதுள்ளனர்.

மொரப்பூர் அடுத்த வகுத்தானூரில் வசித்து வந்த சாக்கம்மாள் வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் கருவி மூலம் சொல்வதற்கு பல ஆயிரம் ரூபாய் வாங்கி வந்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ரகசியமாக புகார் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு சோதனையிட்ட அதிகாரிகள், மருத்துவமே படிக்காத புஷ்பாவதி, மற்றும் கள்ளக்குறிச்சி கவியரசன், ஐயப்பன், ஆகியோரை பிடித்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments