நாளை தொடங்குகிறது ஜி 20 மாநாடு - ரூ.157 கோடி செலவில் சாலைகள் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அதிகரிப்பு!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை ஜி 20 மாநாடு தொடங்குகிறது.
இதையொட்டி நகரை அழகுபடுத்த 157 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே கட்டடங்கள், சாலைகள் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தன.
வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் 200 விருந்தினர்களை தங்க வைப்பது, அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்வது, பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆந்திர அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்தும் அனைத்து வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் முழுமையான விவரங்கள் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளா
Comments