உலக மகளிர் குத்துச்சண்டை - இந்தியாவிற்கு மேலும் 2 தங்கப்பதக்கம்

0 1089

டெல்லியில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கங்களை வென்றது.

50 கிலோ எடை பிரிவு இறுதிப்போட்டியில் வியட்நாமின் குயன் தி தாமை எதிர்கொண்ட இந்தியாவின் நிகத் ஜரீன், 5க்கு பூஜ்யம் என்ற கணக்கில் வென்று தங்கம் வென்றார்.

75 கிலோ எடைப்பிரிவிற்கான போட்டியில், ஆஸ்திரேலியாவின் கைத்லின் பார்கரை 5க்கு 2 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்தியாவின் லாவ்லினா தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம், உலக மகளிர் குத்துச்சண்டையில் இந்தியா மொத்தம் 4 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments