மது போதையில் காரை ஓட்டி போக்குவரத்து காவலர் மீது மோதிய சம்பவத்தில் திடீர் திருப்பம்- வெளியான அதிர்ச்சி உண்மைகள்..!
சென்னை ராயப்பேட்டையில் மதுபோதையில் காரை வேகமாக ஓட்டி, போக்குவரத்து காவலர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய நபரிடம் லஞ்சம் பெற்றது தொடர்பாக, 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 4 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த 4ஆம் தேதியன்று மியூசிக் அகாடமி அருகே போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, போதையில் தாறுமாறாக சென்ற கார், ஜெயக்குமார் என்ற காவலர் மீது மோதியது. இது தொடர்பாக சிசிடிவியின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், விபத்து ஏற்படுவதற்கு முன்பே, நுங்கம்பாக்கத்தில் நடந்த வாகன சோதனையில் அதே கார் சிக்கியதாகவும், மதுபோதையில் வாகனத்தில் இருந்தவர்கள் லஞ்சம் கொடுத்து அங்கிருந்து தப்பியதையும் போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து, லஞ்சம் பெற்று போதை வாகன ஓட்டியை விடுவித்த 4 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
இதனிடையே, காயமடைந்த காவலரின் மருத்துவ செலவிற்கு எனக்கூறி, விபத்து தொடர்பான வழக்கை விசாரிக்கும் காவலர்களும், காரில் இருந்தவர்களிடம் லட்சக்கணக்கான பணம் பெற்றதாக கூறப்படும் நிலையில், அது குறித்தும்
விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments