கல்விக்கட்டணத்திற்காக வயலின் வாசித்து நிதி திரட்டிய கல்லூரி மாணவர்...!
உயர்கல்வி கட்டணத்திற்காக உதவிக்கோரி சென்னை மெரினா கடற்கரையில் வயலின் வாசித்து நிதி திரட்டிய கல்லூரி மாணவனுக்கு திருவல்லிக்கேணி உதவி ஆணையர் உதவி புரிந்தார்.
பைலட் ஆக வேண்டும் என்ற கனவுடன், தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு ஏரோஸ்பேஸ் படித்து வரும் மாணவர் அஜித்தின் பெற்றோர் கயிறு திரிக்கும் வேலை செய்து வருகின்றனர். தனது படிப்பு செலவை தானே சமாளித்துக்கொள்ள எண்ணிய அஜித், வெளிநாட்டினர் போன்று ஜி பே அட்டையுடன், வயலின் வாசித்து கல்விக்கட்டணத்திற்காக நிதியுதவி கோரினார்.
தகவலறிந்து வந்த திருவல்லிக்கேணி உதவி ஆணையர் பாஸ்கர், அங்கேயே அஜித்துக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவியதோடு, தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மாணவனின் கல்வி கட்டணத்திற்கு உதவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
Comments