ராகுல்காந்தியின் தகுதி நீக்கம் என்பது சட்டப்படி நடந்துள்ளது - அமைச்சர் எல்.முருகன்

0 1546

மதுரையில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு சௌராஷ்டிரா - தமிழ்ச் சங்கமம் நடைபெறவுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

மதுரை தெற்கு வாசல் பகுதியில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் எல்.முருகன் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊட்டியில் செயல்பட்டு வரும் ஆம்புலன்ஸ் சேவை குறித்தும் பொள்ளாச்சியில் இளநீர் விற்று, அந்தப் பணத்தில் அரசுப் பள்ளிகளுக்கு உதவி செய்யும் மூதாட்டி குறித்தும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார் எனக் கூறினார்.

தமிழகத்திலுள்ள சௌராஷ்டிர மக்களை குஜராத் அழைத்துச் செல்லவுள்ளது குறித்தும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் குறிப்பிட்டிருப்பதாகவும் எல்.முருகன் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments