இந்தியாவில், கடந்த 2013-ல் சுமார் 5,000 ஆக இருந்த உடல் உறுப்பு தானத்தின் எண்ணிக்கை, 2022-ல் சுமார் 15,000 ஆக உயர்வு - பிரதமர் மோடி

0 1214

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நாட்டில் அதிகரித்து வருவதாக கூறிய பிரதமர் மோடி, ஒருவரின் உறுப்பு தானம் மூலம் 8 முதல் 9 பேர் வாழ்வு பெறலாம் என தெரிவித்தார்.

99-வது மனதின் குரல் நிகழ்ச்சியில், உறுப்பு தானம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உட்பட பல தலைப்புகளில் பிரதமர் உரையாற்றினார்.

இந்தியாவில் கடந்த ஆண்டு சுமார் 15 ஆயிரம் பேர் உறுப்பு தானம் செய்ததாக குறிப்பிட்ட அவர், பிறந்து 39 நாட்களில் உயிரிழந்த பெண் குழந்தையின் சிறுநீரகம் தானம் செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் முன்னேற்றத்தில் பெண் சக்தி முக்கிய பங்கு வகிப்பதாக கூறிய பிரதமர், நாகலாந்தில் 75 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக எம்.எல்.ஏ-க்களாக தேர்வான 2 பெண்கள் உட்பட பலரையும் பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments