12 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட அண்ணாநகர் டவர் பூங்கா.. உயர்கோபுரத்தில் ஏறி சென்னையை ரசித்த மக்கள்..!
சென்னை அண்ணாநகரில் உள்ள அண்ணாநகர் டவர் பூங்கா உயர்கோபுரத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஏறி சென்னையின் அழகை மக்கள் ரசித்தனர்.
பாதுகாப்பு அம்சங்களுடன் டவர் புனரமைக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்ட நிலையில், முதல் ஞாயிற்றுக்கிழமையன்று 133 அடி உயர கோபுரத்தின் உச்சிப்பகுதிக்கு ஏராளமானவர்கள் ஆர்வமுடன் ஏறிச் சென்றனர்.
சுவர்கள், அழகிய வேலைப்பாடுகளுடன், வர்ணங்கள் பூசி புதுப்பிக்கப்பட்ட நிலையில், காதலர்கள் தங்களது பெயர்களை ஹார்ட்டினுக்குள் அம்பு விட்டு சுவர்களில் ஆங்காங்கே எழுதி வைத்திருந்தனர்.
Comments