உலகின் மிக உயரமான ரயில் பாலம் ஜம்முகாஷ்மீரில் அமைப்பு.. விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது - மத்திய ரயில்வே அமைச்சர்
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் செனாப் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரியாசி மாவட்டத்தில் உள்ள பக்கல் மற்றும் கவுரி இடையே 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆற்றின் மட்டத்திலிருந்து ஆயிரத்து 178 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இப்பாலம் ஈபிள் கோபுரத்தை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.
பாலத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டிராலியில் சென்று ஆய்வு செய்ததோடு, விரைவில் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் எனவும் காற்றின் வேகம், நில அதிர்வுகளையும் தாங்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments