36 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது LVM-III ராக்கெட்..!

0 2226

36 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது LVM-III - M-3 ராக்கெட்

ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது மார்க் - 3 ராக்கெட்

சுமார் 5,805 கிலோ எடைகொண்ட 36 செயற்கைகோள்களை சுமந்து செல்லும் மார்க் - 3

பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் 36 செயற்கைகோள்களை நிலைநிறுத்த நடவடிக்கை

ஒவ்வொரு செயற்கைகோளும் சுமார் 150 கிலோ எடை கொண்டது

திட, திரவ எரிபொருள்களில் இயங்கும் மார்க் - 3 ராக்கெட், 640 டன் எடை, 43.5 மீட்டர் உயரம் கொண்டது

பூமிக்கு மேலே சுமார் 450 கி.மீ தூரத்தில் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும் செயற்கைகோள்கள்

ஒன்வெப் நிறுவன செயற்கைகோள்கள் சுமார் 1,200 கிலோமீட்டர் உயரத்தில் செயல்பட்டு வருகின்றன

பிராட்பேண்ட் இணைய சேவையை தடையில்லாமல் வழங்க ஒன்வெப் செயற்கைகோள்கள்

2022 அக்.23-ம் தேதி, ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களை இஸ்ரோ நிலைநிறுத்தியது

இரண்டாவது கட்டமாக 36 செயற்கைகோள்களை சுமந்து செல்லும் மார்க் 3 ராக்கெட்

72 செயற்கைகோள்களை செலுத்த இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியாவுடன், ஒன்வெப் நிறுவனம் ஒப்பந்தம்

சுமார் ரூ.1,000 கோடியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு செயற்கைகோள்கள் நிலைநிறுத்தப்படவுள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments