36 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் எல்.வி.எம். மார்க் - 3 ராக்கெட்

0 1775

36 இணைய தளசேவை செயற்கைக்கோள்களுடன் இஸ்ரோவின் எல்.வி.எம். மார்க் - 3 ராக்கெட் ஞாயிற்றுக்கிழமையன்று விண்ணில் பாயும் நிலையில், அதற்கான 24 மணி நேர கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக்கோள்களை ஏவ, இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி கடந்த அக்டோபரில் 36 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன.

அதைத் தொடர்ந்து 2ஆவது கட்டமாக எஞ்சிய செயற்கைக்கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து காலை 9 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

640 டன் எடையுடன் இந்தியாவிலேயே அதிக எடைகொண்ட அந்த ராக்கெட், சுமார் 5,805 கிலோ எடைகொண்ட செயற்கைகோள்களை பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் செலுத்த உள்ளது. உலகம் முழுவதும் பிராட்பேண்ட் இணையசேவையை வழங்கும் நோக்கில் ஒன்வெப் நிறுவனம் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்துகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments