"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் பன்றி உயிரிழப்பு.. பண்ணையைச் சுற்றி 1 கி.மீ வரை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பன்றிப் பண்ணையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலால் பன்றி ஒன்று இறந்ததை அடுத்து, பண்னையைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போதமலை அடிவாரம் கல்லாங்குளம் பகுதியில் தனியார் பன்றி பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணையில் சில தினங்களுக்கு முன் பன்றி ஒன்று திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்தது.
அதன் உடலை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பிய நிலையில், ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பண்ணையிலுள்ள சுமார் 20 பன்றிகளை அழிக்க கால்நடைத்துறைக்கு உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், சம்மந்தப்பட்ட பண்ணையில் வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
Comments