சாலையில் தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரியின் சிசிடிவி காட்சி..!
ஓசூர் தர்கா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம், கார் மீது மோதியதோடு சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு சென்டர் மீடியன் தடுப்புக்களையும் உடைத்தது.
இந்த, காட்சிகள் முன்னால் சென்று கொண்டிருந்த மினிபஸ்சின் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர் தசரதன், டூவீலரில் பயணித்த கலையரசன், வீரபூசய்யா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments