இந்தியாவிற்கு எதிராக பேசவில்லை.. தொடர்ந்து கேள்விகளை எழுப்புவேன்.. கைது நடவடிக்கைக்கு அஞ்ச மாட்டேன் - ராகுல்

0 1714

 

அவதூறு வழக்கில் எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு

எனது லண்டன் பேச்சு குறித்து, நாடாளுமன்றத்தில், மத்திய அமைச்சர்கள் தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர் - ராகுல்

அதானியுடன், குஜராத் முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் இருந்து மோடி நட்பு பாராட்டி வருகிறார் - ராகுல்

எந்த நடவடிக்கையை கண்டும் அஞ்சப்போவதில்லை; தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக் கொண்டிருப்பேன் - ராகுல்

லண்டன் பேச்சு குறித்து நான் மன்னிப்புக் கேட்க பாஜகவினர் கோரினர்; அதுபற்றி நாடாளுமன்றத்தில் பேச அனுமதி கேட்டேன் - ராகுல்

நாடாளுமன்றத்தில் பேச அனுமதி கேட்டதற்கு, மக்களவை சபாநாயகர், நான் பேச அனுமதிக்க மறுத்துவிட்டார் - ராகுல்

இந்திய விவகாரத்தில் தலையிட எந்தவொரு நாட்டிற்கும் நான் கோரிக்கை வைக்கவில்லை - ராகுல் காந்தி

இந்தியாவிற்கு எதிராக நான் பேசியதாக, மத்திய அமைச்சர் கூறும், எனது லண்டன் பேச்சுகளை யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் - ராகுல்

அதானியின் போலி நிறுவனங்களுக்குச் சென்ற முதலீடுகள் குறித்து நான் கேள்வி எழுப்ப கூடாது என்பதற்காகவே, இத்தனை நாடகங்களும் அரங்கேற்றம் - ராகுல்

பதவி பறிப்பு, கைது நடவடிக்கை உள்ளிட்ட எதற்காகவும், நான் ஒருபோதும் அஞ்ச மாட்டேன் - ராகுல் காந்தி

பிரதமருடன், அதானி ஒரே விமானத்தில் பயணித்த புகைப்படங்களை வெளியிட்ட பிறகே, என் மீதான தாக்குதல்கள் தொடங்கின - ராகுல்

மோடிக்கும், அதானிக்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுப்பியிருந்தேன்; இன்று வரை அதற்கு பதில் இல்லை - ராகுல்

நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை நான் மதிக்கிறேன்; அதை ஏற்றுக் கொள்கிறேன் - ராகுல்

அதானி ஷெல் (போலி) நிறுவனங்களுக்கு வந்த ரூ.20,000 கோடி எங்கிருந்து வந்தது; அந்த பணம் யாருடையது? - ராகுல் கேள்வி

உண்மையை சொல்வது தவிர வேறு எதிலும் எனக்கு விருப்பம் இல்லை; கைது செய்யப்பட்டாலும் உண்மையை தொடர்ந்து பேசுவேன் - ராகுல்

அதானி குறித்து எனது அடுத்த பேச்சை கேட்க பிரதமர் மோடி பயப்படுகிறார்; அந்த பயத்தை அவரது கண்ணில் பார்த்தேன் - ராகுல்

என் மீதான மத்திய அரசின் நடவடிக்கைகளால், எதிர்க்கட்சிகளுக்கு அனுகூலமே தவிர பின்னடைவு எதுவும் இல்லை - ராகுல்

என் மீதான நடவடிக்கைகள் மூலம், எதிர்க்கட்சிகளுக்கு, மத்திய பாஜக அரசு, புதிய ஆயுதத்தை கொடுத்துள்ளது - ராகுல்

என்னைத் தொடர்ந்து சிறையில் அடைத்தாலும்; தொடர்ந்தோ, நிரந்தரமாகவோ தகுதி நீக்கம் செய்தாலும், நான் தொடர்ந்து செயல்படுவேன் - ராகுல்

செய்தியாளர்களை வழக்கமாக இயல்பாக சந்திக்கும் ராகுல் இன்று பலமுறை தண்ணீர் குடித்தவாறே செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார்

செய்தியாளர்களின் சந்திப்பை நிகழ்த்திக் கொண்டிருந்த ராகுல் காந்தி திடீரென பாதியில் செய்தியாளர் சந்திப்பை முடித்து கோபத்துடன் வெளியேறினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments